Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2018 13:01:53 Hours

இந்திய இராணுவ பிரதானி இலங்கை ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கைக்கான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை (18) ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இராணுவத்தினரது ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய இராணுவ பிரதானி நன்றிகளை இலங்கை ஜனாதிபதிக்கு தெரிவித்தார். அத்துடன் இந்திய இராணுவ பிரதானிக்கு இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு ஜனாதிபதி நன்றியை தெரிவித்தார்.

இந்தியா இராணுவ பிரதானியுடன் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களும் இணைந்திருந்தார்.

Mysneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth