Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2018 22:30:47 Hours

அவயங்களை இழந்த இராணுவ போர் வீரன் சக்கர நாற்காலியில் சாதனை

அமெரிக்க வரலாற்றாசிரியரான நியூட் ஜிங்க்ரிச் அவர்களின் கருத்தின் படி ஒருமுறை தோல்வியுற்றதன் பின்பு வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை இராணுவ 6 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் கெமுனு கருணாரத்ன அவர்கள் தெவுந்துரதொடுவவில் இருந்து யாழ் பருத்திதுறை வரைக்கும் சக்கர நாற்காலியில் தனது சாதனையை நிலை நாட்டுவதற்காக டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி தனது சவாரியை ஆரம்பித்தார்.

திங்கட் கிழமை (3) ஆம் திகதி 8.00 மணிக்கு தெவுந்தர விஷ்னு தேவாலயத்தில் பூஜை நிறைவுடன் கோப்ரல் கருணாரத்ன அவர்கள் தனது சவாரியை ஆரம்பித்தார். இவரது சவாரி 576 கிமீ தொலைவை கொண்டுள்ளதுடன் இவரது பயணம் எட்டு நாட்களை உள்ளடக்கியுள்ளது.

இவரது இந்த சவாரியை ஆரம்பித்து வைப்பதற்காக இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த இராணுவ வீரனை கட்டித் தழுவி ஊக்குவித்து சாதனையை நிலைநாட்டுவதற்கு போட்டியை ஆரம்பித்து வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவுக்கரசு அவர்களும் இணைந்திருந்தார்.

மேலும் தெவுநுவர விகாரையின் மஹாசங்க தேரர் அவர்களின் ஆசிர்வாதத்துடன் பிரித் நூல் கட்டப்பட்டு இந்த இராணுவ வீரன் தனது சாதனையை ஆரம்பித்தார். Sportswear free shipping | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK