Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2023 12:00:39 Hours

அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க தளபதியிடன் அங்கிகாரத்துடன் சேவை வனிதையரினால் வீடு நிர்மாணிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இராணுவத் தளபதியின் பிறப்பிடமான மாத்தளைக்கு புதன்கிழமை (19 ஜூலை) விஜயம் செய்து இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை தகுதியான குடும்பத்திற்கு வழங்கி வைத்தனர்.

ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துத் தருமாறு மாத்தளை விஜய கல்லூரியின் முன்னாள் அதிபரினால் இராணுவத் தளபதியிடம் கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளின் பேரில் திருமதி காஞ்சனா இளங்கசிங்க அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், திரு.ரஜிதா தீக்ஷன அவர்கள் வீட்டை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அனுசரணையாளரால் வீடு கட்டுமானத்திற்காக 12.5 லட்சம் ரூபாவும் தளபாடங்களுக்காக 50,000ம் ரூபாவும் வழங்கப்பட்டது.

மாத்தளை, கட்டுதெனிய, நவஜனபதயவில் வசிக்கும் பயனாளியான திரு. டிஏ சரத் ஆனந்த அவர்களுக்கு மாத்தளை விஜய கல்லூரியில் கற்கும் மாணவர்களான இரண்டு மகள்மார் மற்றும் இரண்டு மகன்மார்களுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர். குடிசை வீட்டில் அவர்களது அவநம்பிக்கையான வாழ்க்கை நிலை மற்றும் அவர்களின் அவநம்பிக்கையான பொருளாதார நிலை குறித்து தகவல் அறிந்த விஜய கல்லூரி அதிபர் பாடசாலையின் பழைய மாணவரான இராணுவத் தளபதியின் உதவியை நாடினார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மூலம் நன்கொடையாளர் வழங்கிய நிதியில் 532 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 8 வது கஜபா படையினர் பல வாரங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்தனர்.

நிகழ்வில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் நன்கொடையாளர் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமய சடங்குகளுக்கு மத்தியில் பாரம்பரிய முறைப்படி புதிய வீட்டை புதன் கிழமை சுப நேரத்தில் திறந்து வைத்தனர்.

இந் நிகழ்ச்சி மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுடன் தொடங்கியது. இராணுவத் தளபதி பதாகை ஒன்றைத் திரைநீக்கம் செய்து புதிய வீட்டின் சாவியைப் வழங்கினார். திருமதி ஜானகி லியனகே மற்றும் நன்கொடையாளர்கள் குடும்பத்திற்கு தளபாடங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களையும் அதே சந்தர்ப்பத்தில் வழங்கினர்.

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ எம் சி பி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச் ஆர் ஆர் வி எம் என் டி கே பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்றதுடன் 11 வது காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், திருமதி காஞ்சனா இலங்கசிங்கவின் பிரதிநிதியாக திருமதி சித்ரா இலங்கசிங்க, நிர்மாணப்பணிகளுக்கு பங்களித்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் படையினர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.