Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2018 17:35:04 Hours

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான தொழில் தகைமை சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

இராணுவத்தில் அங்கவீனமுற்ற 171ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் (NVQ) பயிற்சி நெறிகளை மேற்கொண்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு – 02 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லுhரி அரங்கில் கடந்த கடந்த (19) திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.

அந்த வகையில் இலங்கை தொழில் பயிற்ச்சி அதிகாரசபையின் அனுமதியயோடு (VTA) வத்தளை ஹெட்டிக்க ரணவிரு ஆய்வூ மையம் போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு இவ் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான தொழில்ப் பயிற்ச்சிகளான கணினிஜ அப்ளிகேஷன் கார்பென்ரிட் (கட்டடங்கள்) எலக்ட்ரிக் வயரிங், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் டெக்னாலஜி, கம்யூட்டர் அப்ளிகேஷன் அசிஸ்டன்ட் கோர்ஸ், அலுமினிய ஒட்டுமுறை ,சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகள் பழுதுபார்த்தல் , மற்றும் தொலைபேசி பழுதுபார்த்தல் போன்றன வழங்கப்பட்டன.

அந்த வகையில் ஹெட்டிக்க - வத்தளையில் அமைந்துள்ள ரணவிரு ஆய்வூ மையத்தில் (RRC) இவ் வீரர்கள் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன் மேலும் இம் மையத்தைச் சேர்ந்த 388ற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தமது NVQ (Level 2 ,3 மற்றும் 4) இன் பட்டப் படிப்பையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளனர்.

மேலும் இராணுவத் தலைமையகத்தின் மீள்குடியேற்ற பணிப்பாளர் பிரிகேடியர் ஷாந்த திருநாவுக்கரசு அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அந்த வகையில் வெள்ளிக் கிழமை இடம் பெற்ற இந் நிகழ்வானது அழகிய நடனம் பலவாறான கேளிக்கை வினோத நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்களால் பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

அந்த வகையில் தொழில் பயிற்ச்சி அதிகாரசபை ரணவிரு ஆய்வு மையம் போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு கடந்த 2013ஆம் ஆண்டு வரை இவ்வாறான தொழில் பயிற்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ரணவிரு ஆய்வு மையத்தின் ( அறிக்கையின் படி 127 அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தற்போது NVQ பயிற்சி நெறியைப் பயில்வதுடன் 261ற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் NVQ பயிற்சி நெறியின் 3ஆம் மற்றும் 4ஆம் தரத்தை பயிலுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் தொழில்துறைக் கல்வி ஆணையகம் NVQ பயிற்சி நெறியை அறிமுகப்படுத்தியதுடன் இக் கற்கை நெறியின் 7ஆம் தரமானது பட்டப்படிப்புக் கல்வியாகக் காணப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று நிர்மாணிக்கப்பட்ட பழைய தொழுநோய் மருத்துவமனையின் கட்டடத் தொகுதியான் 3.5 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தியே இப் பாரிய திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் வெள்ளிக் கிழமை (19) இடம் பெற்ற இந் நிகழ்வில் 171 அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களில் 101 படை வீரர்கள் தமது (RRC) சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந் நிகழ்வில் தொழில் பயிற்ச்சி அதிகாரசபையின் தலைவரான வைத்தியர் லியோநெல் பின்டோ ரணவிரு ஆய்வு மையத்தின் (RRC) கட்டளை அதிகாரியான பிரிகேடியர் மஞ்சுல மனதுங்க போன்றோர் கலந்து கொண்டு இவ் (NVQ) சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளனர்.

அந்த வகையில் ரணவிரு சம்பத் கேந்தரய திட்டமானது உலகலாவிய ரீதியில் நுாற்றுக்கும் அதிகமான அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நோக்காக் கொண்டு பலவாறான சமூக திட்டங்களான கணினி அப்ளிகேஷன் கார்பென்ரிட் (கட்டடங்கள்) எலக்ட்ரிக் வயரிங் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் டெக்னாலஜி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அசிஸ்டன்ட் கோர்ஸ அலுமினிய ஒட்டுமுறை சிகை அலங்காரம் மற்றும் அழகுக் கலை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகள் பழுதுபார்த்தல் மற்றும் தொலைபேசி பழுதுபார்த்தல் போன்றன இராணுவ மீள்குடியேற்ற பணிப்பகத்தினால் இடம் பெறுகின்றன.

அந்த வகையில் இராணுவ மீள்குடியேற்ற பணிப்பகத்தின் தலைமையில் 60 மில்லியன் ருபா செலவில் இலங்கை பொறியியலாளர்ப் படையினரின் தலைமையில் (CES) கட்டட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் ரணவிரு ஆய்வூ மையத்தின் (RRC) மையமானது 2 அதிகாரிகள் மற்றும் 1174 அங்கவீனமுற்ற படையினருக்ககான தொழில் பயிற்ச்சிகளை வழங்கி வருகின்றது.

அத்துடன் எதிர்காலத்தில் இவ் அங்கவீனமுற்ற படையினருக்கான பேக்கரி இ தோல் பொருட்கள் குளிர்சாதன காற்றுச்சீரமைப்பி பழுது பார்த்தல் தையல் செய்தல் ஆடை தயாரித்தல் மற்றும் வடிவமைத்தல் கணினி ஆட்டோ-கேட் தொழில்நுட்பம் போன்ற பயிற்ச்சிகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

buy shoes | Nike