Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2023 21:00:45 Hours

9 வது இலங்கை பீரங்கிப் படையினரால் சிறுவனுக்கு புதிய வீடு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை கள பீரங்கிப் படையணியினரின் கருணை மற்றும் மனிதாபிமான செயல்பாட்டினால் மஹாவெவ, கொலகனாவாடிய பகுதியில் பெற்றோர்கள் இல்லாமல் தனது பாட்டியுடன் வசிக்கும் எட்டு வயது சிறுவனுக்கு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தனர்.

சிறுவயதில் தந்தையை இழந்து, தாயார் எதிர்பாராதவிதமாக ஊனமுற்றவராக மாறியதானால் நிலுஷ சமிது குமார (8 வயது) ஆதரவற்று இருந்தார். அவரது பாட்டி தங்குவதற்கு போதிய இடவசதி இல்லாவிட்டாலும் அவரது குடிசையில் தங்குமிடம் அளித்து அவரை பொறுப்பேற்றார்.

அந்த சிறுவன் மற்றும் அவனது பாட்டியின் நிலையைக் கேள்வியுற்ற படையினர், சிறுவனின் 8 வது பிறந்தநாளில் புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டு புதன்கிழமை (25) இருவரிடமும் ஒப்படைத்தனர். பிரதேசத்தில் சேவையாற்றும் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் இத்திட்டத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிள்ளையின் பிறந்தநாளில் வீட்டுச் சாவியை கையளித்தார். வெலிகந்த பிரதேச செயலாளர், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் பாடசாலை உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுப் பொதிகளையும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

9 வது இலங்கை கள பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்ஐஎஸ் சந்திரகுமார யூஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி அவர்களினால் இக்கட்டுமானப் பணி மேற்பார்வையிடப்பட்டது.