Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2023 21:40:32 Hours

8 வது கஜபா படையணியின் 22 வது ஆண்டு நிறைவு

8 வது கஜபா படையணியின் படையினர் மாத்தளை உக்குவெலவில் உள்ள அதன் தலைமையகத்தில் பல மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து 22 வது ஆண்டு நிறைவை செவ்வாய்கிழமை (20) கொண்டாடினர்.

மாத்தளை அனுருது அரண்ன விகாரை, ஸ்ரீ முத்துமாரியம்மன் இந்துக் கோவில் மற்றும் மாத்தளை புனித தோமையர் தேவாலயங்களில் படையினர், ஆண்டு நிறைவு தினத்திற்கு முன்னதாக சமய அனுஷ்டானங்களில் பங்குபற்றினர்.

ஆண்டு நிறைவு நாளில் (20), இராணுவ மரபுகளுக்கு ஏற்ப, 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கட்டளை அதிகாரி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவிலும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்தக் காலப்பகுதியில் 8 வது கஜபா படையணி ஆனது 2001 ஆம் ஆண்டு ஜூன் 20 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அமைதிக்கான போரின் போது தாய்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக 8 வது கஜபா படையணியின் 3 அதிகாரிகளும் 122 சிப்பாய்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டீயு அவர்கள், 8 வது கஜபா படையணியின் 7வது கட்டளை அதிகாரியாக 2006 ஜனவரி 1 முதல் 2008 ஜூன் 23, வரை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.