11th April 2024 19:08:51 Hours
இலங்கை உடற்கட்டமைப்பு கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 75வது மிஸ்டர் ஸ்ரீலங்கா தேசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2024 இல் இராணுவ உடற்கட்டமைப்பு வீரர்கள் சிறந்து விளங்கினர்.
2024 ஏப்ரல் 5 ஆம் திகதி வெலிசர நவலோக்க மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் ஒன்பது விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இராணுவ வீர வீராங்கனைகள் ஆறு எடைப் பிரிவுகளில் (60, 65, 75, 75, 80 மற்றும் 85 கிலோ) 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 2 வது (தொ) இலோசாயுத காலாட் படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.பீ.டி.ராஜபக்ஷே தனது சிறப்பான செயல்பாட்டிற்காக மதிப்புமிக்க மிஸ்டர் ஸ்ரீலங்கா விருதுடன் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்கள் விபரம் பின்வருமாறு:
60 கிலோ எடைப்பிரிவு
கெமுணு ஹேவா படையணியின் பணிநிலை சார்ஜன் எச்ஏஎஸ் ஹேவகே - வெண்கலப் பதக்கம்
65 கிலோ எடைப்பிரிவு
கெமுணு ஹேவா படையணியின் சார்ஜன் ஜீஜீஎன் விக்ரமசிங்க - தங்கப்பதக்கம்
70 கிலோ எடைப்பிரிவு
2 வது (தொ) இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் ஆர்ஏபீ டி ராஜபக்ஷ - தங்கப்பதக்கம்
75 கிலோ எடைப்பிரிவு
2 வது (தொ) இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டப்ளியூஎம்சி அஜித்குமார - வெண்கலப்பதக்கம்
80 கிலோ எடைப்பிரிவு
கெமுணு ஹேவா படையணியின் சார்ஜன் கே பி என் குணசேகர – வெள்ளிப்பதக்கம்
85 கிலோ எடைப்பிரிவு
இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் டப்ளியூஏஜேபீ விதான ஆரச்சி– வெங்கலப்பதக்கம்
மிஸ்டர் ஸ்ரீலங்கா விருது
2 வது (தொ) இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் ஆர்ஏபீ டி ராஜபக்ஷ