Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th September 2023 13:44:52 Hours

74 வது இராணுவ தினத்தை முன்னிட்டு ஆசீர்வாத நிகழ்வு மற்றும் இராணுவ அணிவகுப்பு தயார்

(ஊடக வெளியீடு)

காலாட் படை, போர்த் திறன்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 1949 ஆம் ஆண்டு தடங்களை தான்டி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவம், நாட்டின் அதிகம் தேடப்படும் சேவை வழங்குநரும் இன்றியமையாத 'தேசத்தின் பாதுகாவலர்' அதன் 74வது ஆண்டு விழாவை 2023 ஒக்டோபர் 10 கொண்டாடவுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் எளிமையான, விழாக்கள், அமைப்பின் தொடக்கத்திலிருந்தே பாரம்பரியமாக இருந்து வரும் அனைத்து மத விழாக்கள் பெருமை சேர்க்கும்.

இராணுவ கொடி மற்றும் படையணிகளின் கொடிகளுக்கு அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி, ஸ்ரீ தலதா மாளிகை, கதிர்காமம் 'கிரிவெஹெர' ஆகியவற்றில் ஆசீரவாத பூஜைகளும் பொரளை புனிதர்கள் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனையும், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனை மற்றும் கொழும்பு 6 மயூரபதி கோவிலில் சிறப்பு பூஜையும் 2023 செப்டம்பர் 27- ஒக்டோபர் 4 வரை முறையே நடைப்பெறவுள்ளதுடன் இராணுவ தலைமையகத்தில் இரவு முழுவதும் பிரித் பாராயணமும் மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் வழங்கலும் ஓக்டோபர் 5-6 ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

பத்தரமுல்லை (ஒக்டோபர் 6) போர் வீரர் நினைவு தூபியில் அஞ்சலியும் ஓக்டோபர் 10 ஆம் திகதி இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க அணிவகுப்பு மற்றும் அனைத்து நிலையிருக்கான இரவு விருந்துபசாரத்துடன் ஆண்டு நிறைவு நிகழ்வு நிறைவடைய உள்ளது.

இந் நிகழ்வுகளில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு, அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பிப்பார்.

மேலும், இராணுவத் தளபதி நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களை அனுராதபுர நல விடுதியான 'அபிமன்சல 1' இல் சந்தித்து அவர்களுக்கு ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் நலன்களைக் கேட்டறிவார். இதேபோல், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி போயகன விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் சர்வதேச சிறுவர்கள் தினத்துடன் இணைந்த ஒரு சிறப்பு நிகழ்வில், விஜயபாகு காலாட் படையணி குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கதாகும். (முற்றும்)