Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2022 00:20:41 Hours

73 வது இராணுவ ஆண்டுவிழாவை முன்னிட்டு 372 அதிகாரிகள் மற்றும் 7127 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பரிந்துரையின் பேரில் 73 வது இராணுவ ஆண்டு தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் (நிரந்தரம் மற்றும் தொண்டர் படை) 372 அதிகாரிகள் மற்றும் 7127 சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, மேஜர் ஜெனரல் தரத்திற்கு 05 பிரிகேடியர்களும், பிரிகேடியர் தரத்திற்கு 23 கேணல்களும், கேணல் தரத்திற்கு 28 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் தரத்திற்கும் 35 மேஜர்களும், மேஜர் தரத்திற்கு 125 கெப்டன்களும், 63 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும் மற்றும் 93 இரண்டாம் லெப்டினன்கள், லெப்டினன் பதவிக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படை) அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சிப்பாய்களின் பிரிவில், மொத்தம் 136 அதிகாரவணையற்ற அதிகாரிகள்-11 அதிகாரவணையற்ற அதிகாரி -1 பதவிக்கும், 624 பதவி நிலை சார்ஜன்கள் அதிகாரவணையற்ற அதிகாரி -11 பதவிக்கும், 911 சார்ஜன்கள் பதவி நிலை சார்ஜன் பதவிக்கும், 1250 கோர்ப்ரல்கள் சார்ஜன் பதவிக்கும், 2199 லான்ஸ் கோர்ப்ரல்கள் கோர்ப்ரல் பதவிக்கும் மற்றும் 2007 சாதாரண சிப்பாய்கள் லான்ஸ் கோர்ப்ரல் பதவிக்கும் (நிரந்தர, தொண்டர் படை மற்றும் மேலதிக படையணி வேலைவாய்ப்பு அடிப்படையில்) அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டன.

இராணுவத்தில் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்ட ஐந்து சிரேஷ்ட பிரிகேடியர்களில் மதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளரான மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர, 66 வது படைப்பிரிவின் தளபதியான இயந்திரவியல் காலாட் படையணியின் பிரிகேடியர் ஜனக பிரியதர்ஷன, 14 வது படைப்பிரிவின் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் ரொஷான் ஜயமன்ன, மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் ஜானக ரணசிங்க ஆகியோர் அடங்குவர்.