Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2023 18:22:42 Hours

68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் புதுக்குடியிருப்பு குடும்பத்திற்கு புதிய வீடு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 682 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர், இராணுவத்தின் தேவையுடையவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து புதுக்குடியிருப்பு சிவநகரில் வசிக்கும் தகுதியான குடும்பத்திற்கு வியாழக்கிழமை (ஜூலை 13) நடைபெற்ற விழாவில் வழங்கினர்.

பயனாளியான திரு.சுப்பையா கனகலிங்கம், இரண்டு மகள்மார் மற்றும் ஒரு மகனுடன், நிரந்தர வருமானம் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வந்தார். தகரத் தகடுகளால் ஆன சிறிய தங்குமிடமொன்றில் வாழும் குடும்பத்தின் அவல நிலை மற்றும் அவர்களது தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் தொடர்பாக 682 வது காலாட் பிரிகேட் படைப்பிரிவின் கவனத்திற்கு கிராம உத்தியோகத்தர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

நன்கொடையாளர்களாகிய மண்டுவிலில் வசிக்கும் திரு. கே சாந்தா, திரு. எம் சுமன், ஆனந்தபுர திரு. எஸ் புனிதவலன், வாழைமட திரு. எம்பி என்டன் ஆகியோர் இணைந்து இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம். 1,500,000ம் ரூபா பொறுமதியான மூலப்பொருட்கள் மற்றும் வளங்களை வாழங்குவதற்கு முன்வந்ததுடன், 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் டிஎம்டிஎஸ் திசாநாயக்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை இலவசமாக வழங்கினர்.

இத் திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் கீழ் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் 682 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூடபிள்யூகே ரொஹான் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுகப்பட்டது.

இவ் விழாவிற்கு, பிரதம அதிதியாக 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வுகளின் பின்னர், முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகள் குடும்பத்தின் பாவனைக்கான வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தளபாடங்கள் மற்றும் சில உலர் உணவு பொருட்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.