Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2022 09:55:32 Hours

68 வது படைப்பிரிவின் 13வது ஆண்டு நிறைவு

68 வது காலாட் படைபிரிவு தலைமையகம் தனது 13வது ஆண்டு நிறைவை டிசம்பர் 10 ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள அதன் படைப்பிரிவு தலைமையகத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது, இதில் கிரிக்கெட், உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்து போட்டிகள் உட்பட படையணிகள் மற்றும் படையலகுகளின் கீழ் சேவையாற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மஹாமெவுன அசபுவ மற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் சமய வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் வருடாந்த தினத்தை ஆசீர்வதித்தன. டிசம்பர் 8 ஆம் திகதி, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும அவர்களுக்கு (டிசம்பர் 10) இராணுவத்தின் சம்பிரதாய ரீதியிலான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டன.

68 வது படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகத்தை, ஆண்டு தினத்தின் அடையாளமாக, தளபதி திறந்து வைத்து, படைப்பிரிவுப் படையினரிடம் ஒப்படைத்தார். தளபதி அனைத்து படையினர்களுக்கு உறையாற்றியதுடன், அனைத்து படையினர்களுடன் மதிய நேர உணவிலும் கலந்து கொண்டார்.