Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2023 21:10:27 Hours

68 வது படைப்பிரிவின் புதிய தளபதி கள விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்கள் தனது கட்டளை கீழ் உள்ள 681 மற்றும் 682 வது பிரிகேட்களுக்கு செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 விஜயம் செய்தார்.

சிரேஷ்ட அதிகாரியை 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க மற்றும் 682 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூடபிள்யூகே ரோஹான் ஆகியோர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையின் பின்னர் பிரிகேட் நுழைவாயில்களில் வரவேற்றனர்.

பிரிகேட்களுக்கு விஜயம் செய்து படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் தளபதி அவர்கள் அந்நாளின் நினைவாக முகாம் வளாகங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கப்பட்டார். முகாம் வாளகத்திலிருந்து வெளியேறும் முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகங்களில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.