Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2023 20:30:58 Hours

68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் முள்ளிவாய்க்கால் பெண் சிப்பாக்கு நத்தார் பரிசு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 682 வது காலாட் பிரிகேட் படையினர், 68 வது காலாட் படைப்பிரிவின் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து கட்டிய புதிய வீட்டை, 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியில் சேவையாற்றும் முள்ளிவாய்க்கால் தமிழ் பெண் சிப்பாய் அதிர்ஷ்டசாலியாக பெற்றுக் கொண்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, மற்றும் 682 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இந்த வீட்டுத் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஷர்மி சிவசுவாமி ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் சாவியை 25 டிசம்பர் 2023 அன்று விழாவில் பயனாளியான பெண் சிப்பாய் பீ கேஷியா அவர்களிடம் ஒப்படைத்தனர்.

உள்ளூர் நன்கொடையாளர்கள் மற்றும் சிப்பாய்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தாராள மனப்பான்மையினால் பயனாளிக்கு எந்த செலவும் இல்லாமல் புதிய வீடு கட்டப்பட்டது.

மேலும் வீட்டு தளபாடங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும், ரூபா 16,000/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் இந் நிகழ்வின் போது பரிசாக வழங்கப்பட்டது.

593 மற்றும் 681 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சிவில் முக்கியஸ்தர்கள், உறவினர்கள், கிராம மக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.