25th November 2023 10:42:33 Hours
68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் நவம்பர் 22 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பொது மக்களுக்காக நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை முகாமினை 593 வது காலாட் பிரிகேட் தலைமையக வளாகத்தில் நடாத்தப்பட்டது.
இந்த கண் மருத்துவ முகாமில் மொத்தம் 198 பேர் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களில் 28 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அடையாளம் காணப்பட்டனர். இந்த இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு எதிர்காலத்தில் படையினரின் ஒருங்கிணைப்பின் ஊடாக வவுனியா போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
'உதவி மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி' செயலாளர் வைத்தியர். வி சவேஸ்வரன், வைத்தியர்.கஜன் ,மாஞ்சோலை வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர். பாத்திமா நிஷ்னா மற்றும் அவர்களின் வைத்திய ஊழியர்கள் மருத்துவ முகாமை நடாத்துவதற்கான உதவிகளை வழங்கினர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் 593 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்வீஏ சோமவீர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ இச் செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்புக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கினர்.