Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2023 21:35:22 Hours

653 வது காலாட் பிரிகேட் படையினர் முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலை பிள்ளைகளின் கல்விக்கு உதவி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைப்பிரிவின் 653 வது காலாட் பிரிகேட் படையினர், வியாழன் (16 மார்ச்) பெரியமடு முஸ்லிம் பாடசாலை மற்றும் தட்சன் மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 150 பயிற்சிப் புத்தக பொதிகள் மற்றும் உபகரணங்களை பெரியமடு முஸ்லிம் பாடசாலை வளாகத்திற்கு வரவழைத்து விநியோகித்தனர்.

65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, அனுசரணையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் குழுவினால் நிதியுதவி வழங்கப்பட்டது. 653 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க அவர்கள் முழு திட்டத்தையும் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தார்.

இந்நிகழ்வில் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மடு மாதா ஆலயத்தின் நிருவாகி அருட்தந்தை பெப்பி சூசை, 653 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க, 4 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை சமுகம், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.