Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2022 18:36:43 Hours

64 வது படைப்பிரிவு நடாத்திய காற்பந்து போட்டியில் 23 வது விஜயபாகு காலாட் படையணி வெற்றி

ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 23 வது விஜயபாகு காலாட் படையணி விளையாட்டு மைதானத்தில் 64 வது காலாட் படைப்பிரிவு நவம்பர் 13 முதல் 23 வரை அதன் பிரிகேட்கள் மற்றும் படையலகு படையினர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.

64 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட் மற்றும் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 காற்பந்து அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.

23 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவு அணியானது கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் சம்பியன்ஷிப்பை வென்றது, அதன் போட்டியாளரான 662 வது காலாட் பிரிகேட் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

போட்டியின் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.பி.எம் டி சில்வா பெற்றுக் கொண்டார்.

இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க இரியகம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், 642 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் மேதங்க அல்விஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

இறுதிப் போட்டியை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கண்டுகளித்தனர்.