Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2023 19:20:06 Hours

62 வது படைப்பிரிவினால் விளையாட்டு பயிற்றுனர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி அறிமுகம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படை பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க அவர்களின் முன்முயற்சியினால் கெக்கிராவ கல்வி வலயத்தின் 42 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், தம்புத்தேகம கல்வி வலயத்தின் 33 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், பொலன்னறுவை, ஹிங்குராங்கொட மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களின் 77 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் முதன்முறையாக கயிறு இழுத்தல் விளையாட்டில் அறிமுகப் பயிற்சியைப் பெற்றனர்.

விளையாட்டு தொடர்பான பாடநெறி அமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் 14 வது இலங்கை பீரங்கி படையணி முகாமில் செவ்வாய்க்கிழமை (17) நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமர்வுகளின் போது தேசிய கயிறு இழுத்தல் குழுவின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இராணுவ பயிற்றுனர்கள் பயிற்சியளித்தனர்.

பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.14 வது இலங்கை பீரங்கி படையணி முகாமில் நடைப்பெற்ற நிகழ்வில் கெக்கிராவ வலயக் கல்விப் பணிப்பாளர், தம்புத்தேகம வலயக் கல்விப் பணிப்பாளர், பொலன்னறுவை வலயக் கல்விப் பணிப்பாளர், பொலன்னறுவை றோயல் கல்லூரி சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றினர்.