Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2023 20:03:43 Hours

61 வது படைப்பிரிவினரால் கராப்பிட்டிய மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி

61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் இன்று பிற்பகல் (டிசம்பர் 09) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டுமானப் பணியிடத்தில் திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டதை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக அவ்விடத்திற்கு விரைந்தனர்.

சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியேற்றுவதற்கு முயற்சியினை மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும், மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்த ஒருவரின் உடலையும், மோசமாக காயமடைந்த மற்ற இரண்டு தொழிலாளர்களையும் மீட்டனர். படையினர் அவர்கள் அனைவரையும் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

61 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.