Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2024 18:24:41 Hours

60வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இராணுவத்திற்கு உயர்மட்ட விருதுகள்

60வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் 2024 ஜனவரி 12 முதல் 13 வரை சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் 54 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 480 வீரர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

போட்டியில் இராணுவ ஆண்கள் அணி 06 தங்கம், 08 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஆண்கள் சாம்பியன்ஷிப்பை உறுதி செய்தது. அதேபோன்று, இராணுவ மகளிர் அணி 05 தங்கம், 03 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மகளிர் சம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்றது. இலங்கை விமானப்படை இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

மேலும், கோப்ரல் டபிள்யூ.எல்.ஏ.எச் இமேஷா சிறந்த வீராங்கனையாக மகுடம் சூட்டப்பட்டதுடன் மகளிர் திறந்த பிரிவில் இராணுவ மகளிர் அணி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ ஜூடோ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். போட்டியைக் காண சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.