Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2023 19:53:42 Hours

6 வது கெமுணு ஹேவா படையணி படையினரால் பாரதி பாடசாலை விளையாட்டு போட்டிகளுக்கு உதவி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் கீழுள்ள 681 வது பிரிகேடின் 6 வது கெமுணு ஹேவா படையணி படையினர் பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க திங்கட்கிழமை (பெப்ரவரி 20) முல்லைத்தீவு பாரதி வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி நடத்துவதற்குத் தேவையான கூடாரங்கள் ஏற்பாடு மற்றும் தரை அமைப்புகளை செய்து ஆதரவளித்தனர்.

6 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரியான மேஜர் எஸ் எல் டப்ளியூ திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒரு அதிகாரியும் 06 சிப்பாய்களும் இந்த சமூக நல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர, 68 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க அகியோர் இந்த திட்டத்திற்கு தமது ஆசிகளை வழங்கினார்கள்.