Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

6 ஆவது இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பனியினர் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி

இலங்கை படைக்கலச் சிறப்பணிகளுக்கிடையிலான கால் பந்தாட்டப் போட்டியானது ஓகஸ்ட் 1-2 ஆம் திகதிகளில் திருக்கோணமலையில் உள்ள 4 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் கிளப்பன்பேர்க் முகாமில் பிரமாண்ட அளவில் நடைபெற்றது.

இப்போட்டியில் 6 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியினர் வெற்றியை சுவிகரித்துகொண்டதோடு, 3 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியினர் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றி கொண்டனர்.

இந் நிகழ்விற்கு 221 ஆவது பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவாசம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணத்தையும் வழங்கினார்.

இப் போட்டியில் 6 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் இராணுவச் சிப்பாய் பி. டி. ஜி. ஜே. ஏ பண்டாரகொட சிறந்த போட்டியாளரகவும், அதே நேரத்தில் 3 ஆவது படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம். பி. நிஷ்சங்க சிறந்த கோல் கீப்பராகவும் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். Nike sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp