Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2023 21:36:14 Hours

592 வது காலாட் பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 592 வது காலாட் பிரிகேட் படையினர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் இணைந்து வழங்கிய அனுசரணையில் 'அதஹித' நிறுவனத்தின் ஸ்தாபகரான திரு.பிரபாத் லோகுபாலசூரியவின் ஒருங்கிணைப்பின் ஊடாக வழங்கிய உதவி மூலம் தண்ணிமுறிப்பு ஆரம்பப் பாடசாலை மற்றும் உண்ணாப்பிலவு ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 110 மாணவர்களுக்கு, செவ்வாய்க்கிழமை (ஜூலை 04) கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 592 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டிபீசி ஆராச்சிகே அவர்களின் தலைமையின் கீழ் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டமானது பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன், இந்நிகழ்வில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பொதியும் ரூபா 3000.00ம் பெறுமதியானது.

592 வது காலாட் பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் விநியோக நிகழ்வில் கலந்து கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.