Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2023 05:19:08 Hours

561 வது பிரிகேட் படையினர் வன்னியில் வெள்ள நிவாரண பணி

56 வது காலாட் படைப்பிரிவின் 561 வது காலாட் பிரிகேடின் 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் 2023 டிசம்பர் 16 ஆம் திகதி கமநல சேவைகள் திணைக்களத்தின் தொழிலாளர்களின் ஆதரவுடன் மரையிலுப்பை மைலமோட்டையில் சேதமடைந்த குளத்தை சீரமைப்பதற்கு தமது உதவிகளை வழங்கினர்.

இந்த பணி படையினர் உள்ளூர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மரையிலுப்பை கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் சேதமடைந்த குளத்தை மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் படையினருக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.