Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2024 13:13:17 Hours

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 561 வது காலாட் பிரிகேட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 மார்ச் 05 அன்று 561 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை கீழ் உள்ள படையலகுகளுக்கு முறையான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது வருகை தந்த படைப்பிரிவின் தளபதியை பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகள் முகாம் வளாகத்தில் அன்புடன் வரவேற்றனர். பின்னர், அவர்கள் தங்களின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினர். மேலும், படைப்பிரிவின் தளபதி, அந்தந்த படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன், அவர்களுடன் நெருக்கமான உரையாடலையும் மேற்கொண்டார்.

561 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.