Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 20:14:10 Hours

553 வது காலாட் பிரிகேட் படையினரால் தர்மபுரம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது காலாட் பிரிகேட் படையினர் தருமபுரத்தில் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 200 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் சமூக செயற்றிட்டத்தை தருமபுரம் இல.1 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வியாழக்கிழமை (நவம்பர் 23) முன்னெடுத்தனர்.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதீஸ்வரன் அவர்களுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கண்டாவளை பிரதேச செயலாளர் திரு.டி.பிருந்தாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க நலன் விரும்பிகள் குழுவின் அனுசரணையின் கீழ் தலா ரூ. 3200.00.பெறுமதியான பாடசாலை உதவிப் பொதிகளை 200 மாணவ, மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

மேலும், மாணவர்களிடையே தோட்டக்கலையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு மாணவருக்கும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் தென்னம் பிள்ளைகள், லயன்ஸ் கழகத்தினால் உரம் மற்றும் ஏனைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் ஆதரவுடன் 553 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.எஸ்.கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களினால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் விழாவில் 55 வது படைப்பிரிவின் தளபதி, 553 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.