Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2023 09:30:25 Hours

55 வது காலாட் படை பிரிவின் பயன்படுத்த முடியாத மிதிவண்டிகள் பழுதுபார்ப்பு

எரிபொருள் செலவைக் குறைப்பதை கருத்திற்கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப் பிரிவினரால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை பேணும் நிமித்தம் சவாரி செய்வதை ஊக்குவிப்பதற்காக இதுவரை பயன்படுத்தப்படாமல், உதிரி பாகங்கள் இல்லாமல் செயலிழந்த நிலையில் காணப்பட்ட 42 மிதிவண்டிகளை பழுதுபார்த்து 55 வது காலாட் படை பிரிவு பொறுப்பில் உள்ள அனைத்து கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு வியாழக்கிழமை மார்ச் 30 விநியோகிக்கப்பட்டது.

55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்னகுணரத்ன அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட மற்றும் 55 வது காலாட் படைபிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் ரணித் ஜயசிங்க அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

இம் மிதி வண்டிகள் உதிரி பாகங்கள் இல்லாததாலும், நீண்ட காலமாகப் பயன்படு இல்லாமல் மிதிவண்டிகள் பல்வேறு வடிவங்களில் செயலற்று துருப்பிடித்ததாக காணப்பட்டன. சில வாரங்களுக்குள் அவை நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன் அவ் மிதிவண்டிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்து குறைந்தபட்ச செலவில் பழுதுபார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

55 வது காலாட் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதியின் கேணல் ரணித் ஜயசிங்க பல அதிகாரிகளுடன் பழுதுபார்க்கப்பட்ட சைக்கிள்களை அந்தந்த பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு வழங்கினார்.