Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2023 13:39:33 Hours

55 வது காலாட் படைப்பிரிவினால் கிளிநொச்சியில் நத்தார் கொண்டாட்டம்

55 வது காலாட் படைபிரிவு நல்லுறவு மற்றும் சமூக-ஒத்துழைப்பின் பிணைப்புகளை வளர்ப்பதற்காக 2023 டிசம்பர் 18 அன்று கிளிநொச்சியில் உள்ள 'நெலும்பியச' கேட்போர் கூடத்தில் நத்தார் கரோல் கீத நிகழ்ச்சியை நடாத்தியது.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். மறை மாவட்ட ஆயர் அருட் தந்தை வண. ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நத்தார் வாழ்த்துச் செய்தியை வழங்கியதுடன் நத்தார் பண்டிகையின் முக்கியத்துவத்தையும், பொதுமக்களின் தார்மீக வளர்ச்சிக்கான உண்மையான அர்த்தத்தையும் வலியுறுத்தினார்.

புனிதமான நிகழ்வையும் அதன் சூழலையும் அதன் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வரும் வகையில், 'உலகிற்கு சமாதானம்' என்ற அடையாளமாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நத்தார் கரோல் கீதங்கள் பாடப்பட்டன.பெப்டிஸ்ட் தேவாலயம், சர்ச் ஒப் சவுத் இந்தியா, மெதடிஸ்ட் தேவாலயம், கத்தோலிக்க தேவாலயம் - கிளிநொச்சி, சர்ச் ஒப் தி அமெரிக்கன் சிலோன் மிஷன் மற்றும் சர்ச் ஒப் சிலோன் உட்பட பல்வேறு தேவாலயங்களின் பாடகர்கள் இந்த நிகழ்வில் உற்சாகமான மெல்லிசை மற்றும் தாளங்களுக்கு ஏற்ப பாடல்களை பாடினர். இராணுவ நடனக் குழு, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வாத்திய குழு மற்றும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் பேண்ட் இசைக்குழு ஆகியவற்றின் பங்கேற்பு முழு நிகழ்வையும் பிரமிக்க வைத்தது.

உலகில் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அனைத்து பாடகர்களும் இணைந்து "FelizNavidad" எனும் வாழ்த்துகளை ஒரு குழுவாக வழங்கினர், "உலகிற்கு அமைதி" என்ற கருப்பொருளில் இந்த ஒருங்கிணைந்த குரல் பங்கேற்பாளர்களின் பாராட்டுக்களை ஈர்த்தது. இந்நிகழ்வில் பௌத்த துறவிகள், இந்து மதகுருமார்கள், முஸ்லிம் மௌலவிகள் மற்றும் பல கிறிஸ்தவ மதகுருமார்கள் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர், பூநகரி, கந்தவெளி, கரைச்சி ஆகிய பிரதேச செயலாளர்கள், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் 55 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார், முதலாம் படைத் தளபதி, 51 ஆவது படைப்பிரிவின் தளபதி, முன்னரங்கு பராமரிப்புப் பகுதி (வடக்கு) தளபதி, 551 மற்றும் 552 வது பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட பணிநிலை. ,இரணைமடு விமானப் படைத்தளத் தளபதி, அதிகாரிகள், சிப்பாய்கள், மற்றும் பல்வேறு கிறித்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள், அறிவியல்நகர் பல்கலைகழகத்தின் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் வண்ணமயமான நத்தார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.