Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2023 20:57:37 Hours

55 காலாட் படைபிரிவினரால் பருத்தித்துறை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள்

யாழ்ப்பாண குடாநாட்டின் வடமராட்சி வலயத்தின் கல்விகொட்டாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் 55 வது காலாட் படைபிரிவின் 551 வது காலாட் பிரிகேட்டின் ஒருங்கிணைப்பில் ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தேவையான மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலைக்குப் பின் வகுப்புகளை நடத்தும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

55 ஆவது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ எனடியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் கனடாவை தளமாகக் கொண்ட 'வன்னி எய்ட்ஸ்' அமைப்பினால் அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

'வன்னி எய்ட்ஸ்' வழங்கும் நிதியின் மூலம் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் மாதாந்தம் ரூபா 12,000/= வழங்கப்படவுள்ளதுடன், 4 வது இலங்கை சிங்க படையினரின் ஒத்துழைப்புடன் 55 ஆவது காலாட் படைபிரிவின் சிவில் விவகார அலுவலகத்தின் ஊடாக இத்திட்டம் நிர்வகிக்கப்படவுள்ளது..

திங்கட்கிழமை (19) பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற எளிய வைபவத்தின் போது ஆதரவான வகுப்புகளை நடத்துவதற்கான முறையான ஆரம்பம் ஆரம்பமானது.

55 ஆவது காலாட் படைபிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ எனடியு பீஎஸ்சி ஐஜி பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டதுடன் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. கே. சத்தியபாலன், கரவெட்டி மேலதிக பிரதேச செயலாளர் திருமதி உமாகாந்தி சிவகாமி, கனடா 'வன்னி எய்ட்ஸ்' அமைப்பின் பிரதிநிதி திரு. ஜெகநாதன், அதிபர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.