Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2023 20:25:14 Hours

54 வது காலாட் படைபிரிவு சிவில் பங்கேற்புடன் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்

கல்விக்கான சிறுவர் உரிமைகள், நற்பண்புகளை மேம்படுத்துதல், மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், நகரத்தை சுத்தம் செய்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மரம் நடும் திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்தந்த அதிகாரிகளை ஊக்குவித்தலை நோக்காக கொண்ட கலந்துரையாடல் 54 வது படைப்பிரிவு தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 5 நடைபெற்றது.

54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஏ ஸ்டான்லி டி மெல், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி டி தேவராஜா, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ் எஸ் வலந்தினி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் 54 வது காலாட் படைபிரிவின் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சமூக விரோதச் செயற்பாடுகளில் இருந்து இளம் தலைமுறையினரைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் முக்கியத்துவம் தொடர்பாக படைபிரிவின் தளபதி இக் கலந்துரையாடலில் விளக்கினார்.

மன்னார் மாவட்ட செயலாளர் அவர்கள் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், எமது சமூகத்தை சிறப்பாகவும் சிறந்ததாகவும் மாற்றுவதற்கு ஆயுதப்படை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகளை பாராட்டினார்.