25th November 2023 10:33:10 Hours
சிவில்-இராணுவ ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் 53 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தம்புள்ளை, சிகிரியா, இனாமலுவ, திகம்பதன, பொலத்தாவ, வராஹேன, நாகல்வெவ, சியம்பலாவெவ, கிம்பிஸ்ஸ, பஹலவ்வ, வெலிஹேன, கலோகஹேல, ரொட்டோரிகம, ஹென்வெலயாகம, பல்வெஹெர மற்றும் கந்தலாகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 130 தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு 2023 நவம்பர் 2 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கினர்.
வண.சம்மஜோதி மகா தேரர் மற்றும் வண.வியன் பிக்குணி உட்பட வியட்நாம் தூதுக்குழுவினரிடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன் கண்டி அஸ்கிரி மகா விகாரையின் வண. கே.சீலானந்த தேரர் (பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்) ஆகியோரினால் அனுசரணை வழங்கப்பட்டது. அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பயனிகளை படையினர் தெரிவுசெய்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் அங்கவீனமுற்ற நபருக்கு சக்கர நாற்காலியை நன்கொடையாளர்களின் பிரதிநிதி பரிசாக வழங்கினர்.
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்னாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி, 53 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் கேஎல்எஸ்எஸ் லியனகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, 53 வது காலாட் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் எம்.ஏ.எச்.டபிள்யூ பிரேமச்சந்திர ஆர்எஸ்பீ ஆகியோர் நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் நிகழ்வை ஒழுங்கமைக்க தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.