Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2018 19:43:34 Hours

53ஆவது படைப் பிரிவின் 23ஆவது ஆரம்ப நினைவாண்டு நிகழ்வுகள்

தம்புள்ளைப் பிரதேசத்தில் இனமலுவத்தில் அமைந்துள்ள 53ஆவது படைப் பிரிவின் 23ஆவது ஆரம்ப நினைவாண்டை இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க பலவாறான நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (22) திகதி செப்டெம்பர் மாதம் இடம் பெற்றம்.

மேலும் இந் நிகழ்வுகள் 53ஆவது படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றதுடன் கெக்கிராவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கான மதிய உணவு மற்றும் பல மருந்து வகைகளையும் வழங்கி வைத்துள்ளனர்.

அத்துடன் இப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவூகளை உள்ளடக்கி காற்பந்து கூடைப் பந்து கிரிற்கெற் மற்றும் நீச்சல் போன்ற போட்டிகளும் படையினரை முன்னிலைப் படுத்தி இடம் பெற்;றதோடு இந் நிகழ்வில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் 53ஆவது படைப் பிரிவின் தளபதியவர்கள் வழங்கி வைத்தார்.

இவ்வாறு தலைமையகத்தில் இந் நிகழ்வையொட்டி இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன 53ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது. trace affiliate link | 『アディダス』に分類された記事一覧