Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2023 21:03:09 Hours

521 வது காலாட் பிரிகேடில் வண்ணமயமான நத்தார் கரோல் நிகழ்ச்சி

521 வது காலாட் பிரிகேட், 4 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் இணைந்து பருத்தித்துறை பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சிவில் - இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) நத்தார் கரோல் கீத நிகழ்ச்சியை நடாத்தினர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 521 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்நிழ்ச்சி நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. பலாநிதி பீ.ஜே.ஜபரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, மெதடிஸ்ட் ஆண்கள் பாடசாலை, புனித மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் புனித தோமஸ் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்ச்சிகளும் கரோல் கீத இசை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.

சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிரார்த்தனைகளை அருட்தந்தை மைக்கல் சௌந்திர நாயகம் மற்றும் தேவாலய அருட் சகோதரிகள் நிகழ்த்தினர். நத்தாரின் மதிப்பை எடுத்துரைக்கும் வகையில், ஆயரின் செய்தியும் வாசிக்கப்பட்டது. பங்குபற்றிய அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் இரவு உணவு வழங்கியதுடன் நிகழ்வுகள் முடிவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வண்ணமயமான நிகழ்வை கண்டுகளித்தனர்.