Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2024 18:42:23 Hours

51 வது காலாட் படைப்பிரிவினால் நட்பு ரீதியிலான காற்பந்து போட்டி

யாழ். இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் நோக்கிலும் இராணுவத்திற்கும் சிவில் மக்களுக்கும் இடையில் நல்லுரவை மேம்படுத்தும் வகையிலும் 51 வது காலாட் படைப்பிரிவு வியாழக்கிழமை (01 பெப்ரவரி 2024) 51 வது காலாட் படைப்பிரிவு தலைமையக சிமிக் பூங்காவில் காற்பந்து போட்டியை நடாத்தியது.

யோகபுரம் அண்ணா நட்சத்திர உதைபந்தாட்ட அணியும், செல்வபுரம் உதயசூரியன் உதைபந்தாட்ட அணியும் மோதிய இறுதிப் போட்டியில் செல்வபுரம் உதயசூரியன் காற்பந்து அணி சாம்பியன்ஷிப் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்த போட்டிக்கு மேலதிகமாக, பட்டம் விடும் நிகழ்வும் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தார்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி, 511 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வை கண்டுகளித்தனர்.