Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2023 20:25:44 Hours

51 வது காலாட் படைப்பிரிவின் 2023 நத்தார் கரோல் பாடல்கள் யாழ் ஆயர் இல்லத்தில்

நத்தார் தினத்தை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2023 டிசம்பர் 24 அன்று பாதுகாப்பு படையினருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் யாழ் ஆயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் நத்தார் கரோல் நிகழ்வு ஏற்பாடு செய்தனர்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் 51வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள அனைத்துப் பிரிகேட்டுகள் மற்றும் படையலகுகளின் படையினரால் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் 1000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் அவர்கள் படைப்பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நத்தார் கரோல் நிகழ்வுகள் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து கலாசார அடையாளங்களின் ஒன்றானது. இராணுவ இசைக்குழு வழங்கிய இசையுடன் கரோல் பாடல்கள் பாடசாலை கரோல் குழுக்களால் பாடப்பட்டன. இலங்கை இராணுவத்தினரின் முயற்சிகளை கிறிஸ்தவ பக்தர்கள் பெரிதும் பாராட்டினர். இந்நிகழ்வை ரசிக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர்.