Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2022 19:21:29 Hours

5 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி சிப்பாய்களினால் விஷேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி

மட்டக்களப்பு, சத்தூர்கொண்டானில் அமைந்துள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான 'ஓசனம்' மையத்திற்கு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முயற்சியினால் ஞாயிற்றுக்கிழமை (09) இலவச உலர் உணவுப் பொதிகள் மற்றும் வெலிகந்தவில் அமைந்துள்ள 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையினரின் அனுசரணையுடன் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன வழங்கிய வழிகாட்டுதலின் கீழ், 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 4 கெமுனு ஹேவா படையணி படையினர் இந்த ஏற்பாட்டினை செய்தனர். மகளீர் இராணுவ சிப்பாயிகளினால் வழங்கப்பட்ட சுவையான மதிய உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகளின் பெறுமதி ரூ.60,000.00 ஆகும். 24 குழந்தைகளின் பெற்றோர்கள் இராணுவத்தின் அனுசரணையுடன் உலர் உணவு நிவாரணப் பொதிகளைப் பெற்றனர்.

மேலும், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் தனது ஒய்வு தினமான ஞாயிற்றுக்கிழமை (09) குழந்தைகளுடன் இரண்டு மணித்தியாலயம் செலவிட்டார். வெவ்வேறு விஷேட திறன்களைக் கொண்ட அந்த குழந்தைகள் வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் மற்றும் நடனம் போன்றவற்றின் மூலமும் தங்கள் கலை ஆர்வம் மற்றும் அழகியல் திறன்களை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு காண்பித்தனர்.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் பிரபாத் ஹல்பேஜ், 231 வது பிரிகேட் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் தம்மிக்க வீரசிங்க, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.