Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2023 10:39:31 Hours

4 வது கஜபா படையணி படையினரின் படையலகு பயிற்சி நிறைவு

4 வது கஜபா படையணியின் 08 அதிகாரிகள் மற்றும் 292 சிப்பாய்களுடன் 10 ஒக்டோபர் 2023 முதல் 23 நவம்பர் 2023 வரை பம்பைமடுவில் உள்ள படையலகு பயிற்சி பாடசாலையில் தங்கள் படையலகு பயிற்சியினை மேற்கொண்டனர்.

இப் பாடத்திட்டத்தில் விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகள் வரைபட வாசிப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், உள்ளக பாதுகாப்பு, கட்டப்பட்ட பகுதிகளில் சண்டை, துப்பாக்கி சூடு மற்றும் நீச்சல் ஆகியவை அடங்கும்.

மேலும், படையலகு பயிற்சி நெறியின் முடிவில் 4 வது கஜபா படையணியின் குழுவினால் 'ரிவிரேச நடவடிக்கை' பற்றிய விளக்கக்காட்சி நடத்தப்பட்டது.

பாடநெறியின் நிறைவுரை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் நிகழ்த்தப்பட்டது. 54 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதிகள், வன்னி பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி, 561 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு விழாவில், கீழ்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன:

சிறந்த மாணவர் – மேஜர் ஆர்.எஸ்.எஸ் ரனவீர ஆர்எஸ்பீ கஜபா படையணி

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் – காலாட் சிப்பாய் டி.கே.எம்.ஜி.டி.எம் குரே

சிறந்த உடற்தகுதி - கோப்ரல் ஏ.பீ.சி அத்தநாயக்க

சிறந்த அணி - பி அணி

சிறந்த குழு - பி அணியின் முதல் குழு

சிறந்த வரிசை – சி அணியின் 2ம் குழுவின் முதல் வரிசை