Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

4 கெமுனு படையின் தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 வது கெமுனு ஹேவா படையினர் ஏப்ரல் 10-11 திகதிகளில் சித்தடி சித்தி விநாயகர் கிரிக்கெட் மைதானத்தில் தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னருவை மாவட்டங்களில் உள்ள பின்வரும் தேசிய பாடசாலைகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணிகள் போட்டிகளில் பங்கேற்றன:

அ. கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை – அம்பாறை

ஆ. புனித மைக்கல் கல்லூரி - மட்டக்களப்பு

இ. புனித ஜோசப் கல்லூரி தேசிய பாடசாலை திருகோணமலை

ஈ. மின்னேரிய தேசிய கல்லூரி – பொலன்னருவை

டாக்டர் ரவி குமாரின் துவக்கமும் உண்மையான பங்களிப்பும் இந்த இன நல்லிணக்கத்திற்கான போட்டியை பிரமாண்ட மட்டத்தில் நடத்துவதற்கு பெரிதும் பயனளித்தன.

2021 ஏப்ரல் 10 அன்று போட்டியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இறுதிப் போட்டி 2021 ஏப்ரல் 11 அன்று மின்னேரிய தேசிய கல்லூரி – பொலன்னருவை மற்றும் புனித மைக்கல் கல்லூரி - மட்டக்களப்பு இடையே நடைபெற்றது மினேரிய தேசிய கல்லூரி – பொலன்னருவை போட்டியை வென்றது.

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய தேசியப் பாடசாலை கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், திரு கே கருணாஹரன் மற்றும் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் திரு. ரவீந்திர புஷ்பகுமார ஆகியோர் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

23 வது படைப்பிரிவு தளபதி, 231, 232 மற்றும் 233 பிரிகேட்களின் தளபதிகள், இராணுவம், பொலிஸ் மற்றும் அரச சேவைகளின் சிரேஸ்ட அதிகாரிகள் பார்வையாளர்களாக கலந்துக் கொண்டனர். jordan release date | NIKE AIR HUARACHE