Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2024 16:43:04 Hours

34 வருட கால சேவையின் பின் மேஜர் ஜெனரல் டி.ஏ. அமரசேகர யூஎஸ்பீ அவர்கள் ஓய்வு

ஓய்வுபெறும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்திற்கு அவரது அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (20) விஜயம் செய்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், மேஜர் ஜெனரல் டி.ஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்களின் சிறந்த திறன் மற்றும் இராணுவத்தில் 34 வருடங்களுக்கும் மேலான அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டினார்.

மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரின் போதும் வழங்கல் அதிகாரியாகவும் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையை லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி, விருந்தினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் கேட்டறிந்து கொண்டு அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது சேவையை ஆற்றுவதற்கு அவர் வழங்கிய ஊக்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்களுக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்கள் 1989 நவம்பர் 14 ம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சி பாடநெறி 34 பி ஊடாக பெற்றதுடன், அவர் 14 நவம்பர் 1991 இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். அவரது சேவைக்காலத்தில் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன், தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 24 செப்டம்பர் 2023 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் தளபதியாக பதவி வகித்தார். அவர் வவுனியா உள்ளக பாதுகாப்பு படை குழு தளபதி, 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் வேலைதள அதிகாரி கட்டளை, பலாலி களப் பட்டறையின் அதிகாரி (நிர்வாகம்), 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), (கொழும்பு) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பட்டறையின் அதிகாரி கட்டளை, 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மத்திய பட்டறையின் அதிகாரி கட்டளை, மினுஸ்மா ஹட்டி ஐநா நடவடிக்கை படையின் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இலங்கை படையின் அதிகாரி கட்டளை, கட்டுபெத்த அடிப்படைப் பட்டறையின் இரண்டாம் கட்டளை, 56 வது காலாட் படைப்பிரிவின் பணி நிலை அதிகாரி 1(நிர்வாகம் மற்றும் வழங்கல்), உடவலவ அடிப்படைப் பட்டறையின் பதில் தளபதி, 3 மற்றும் 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, கொஸ்கம இராணுவ கைத்தொழில் திட்டத்தின் கட்டளைத் தளபதி, கட்டுபெத்த அடிப்படைப் பட்டறையின் தளபதி, 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் நிர்வாகம் மற்றும் வழங்கல், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி, தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், முதலாம் படையின் பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் போன்ற நியமனங்களையும் வகித்துள்ளார்.

அவர் இராணுவ வாழ்க்கையில்,படையலகு கணக்கீட்டு அதிகாரி பாடநெறி, உளவியல் செயல்பாடுகள் பயிற்சி, உயர் ஆங்கிலப் பாடநெறி, இளம் அதிகாரிகள் அடிப்படை பாடநெறி - பங்களாதேஷ், வேலைத்தள தளபதி பாடநெறி - இந்தியா, அதிகாரிகளின் உயர் இயந்திர பொறியியல் பாடநெறி இந்தியா, சிரேஷ்ட அதிகாரிகள் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பாடநெறி - இந்தியா போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை கற்றுள்ளார்.

மேலும், சிரேஷ்ட அதிகாரி, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் இளங்கலை பட்டம், முகாமைத்துவ ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பட்ட படிப்புகளையும் கற்றுள்ளார். மேலும் இலங்கை வாகனப் பொறியியல் நிறுவனத்தின் இறுதிப் பரீட்சையை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.