Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 19:30:32 Hours

34 பேர் தமிழ் மொழி பாடநெறியில் தேர்ச்சி

தமிழ் மொழி பாடநெறி எண் -06 இல் கலந்து கொண்ட 34 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வவுனியா முதலாவது இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையகத்தில் ஜூன் 02 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் எஸ்பீஜி கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி நிறைவுரை நிகழ்த்தினார்.

வன்னிப் பிராந்தியத்தில் சேவையாற்றும் படையலகுகளின் படையினரின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்துவதன் நிமித்தம் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமயக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் முதலாவது இராணுவப் புலனாய்வு படையணியின் 34 சிப்பாய்கள் தமிழ் மொழிப் பாடநெறி இலக்கம் - 06 இல் பயிற்சி பெற்றனர்.

இப் பாடநெறியானது லெப்டினன்ட் ஏஜிஎன் சந்துருவான் அவர்களின் ஒருங்கிணைப்பில் முதலாவது இராணுவப் புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி எஸ்எஜேகே சுபசிங்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இடம் பெற்றதுடன் சார்ஜென்ட் ஜேஜேஎம் சஞ்சீவ மற்றும் கோப்ரல் ஆர்எம்ஈ ரத்நாயக்க ஆகியோர் பாடநெறியின் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.