Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2023 21:32:38 Hours

3 வது (தொ) கெமுணு ஹேவா படையினரால் இரத்த தானம் வழங்கல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுணு ஹேவா படையணி படையினரால் 2023 பெப்ரவரி 15 ஆம் திகதி கம்புருகமுவ பிராந்திய இரத்த மத்தியஸ்தானத்திற்கு இரத்த தானம் வழங்கினர்.

கம்புருகமுவ பிராந்திய இரத்த மத்தியஸ்தானத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் தலைமையில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 32 இராணுவ வீரர்கள் தென் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளின் நோயாளிகளின் நலனுக்காக இரத்தம் தானம் வழங்கினர்.

613 வது காலாட் பிரிகேட் தளபதி 3 வது (தொ) கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரியுடன் இணைந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.