Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2023 19:31:29 Hours

3 ஆம் கட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீடமைப்புத் திட்டம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதன் 3 ஆம் கட்டத்தின் கீழ் தகுதியான இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினருக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமானது 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் வீடற்ற இரண்டு வீரர்களுக்கு இரண்டு புதிய வீடுகளை சனிக்கிழமை ( 10) பரிசாக வழங்கியது.

திட்டத்தின் காரணகர்தாவான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதவி நிலைப்பிரதானியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு வீடுகளை திறந்து வைத்தார். அதன்படி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் மனித வளம் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை பயன்படுத்தி கந்தளாய் ஜனசவிகமவில் வசிக்கும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீடற்ற சிப்பாய் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணிக்கப்பட்டது. இவர் இரு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் படைத் தளபதியின் வழிகாட்டுதலின்படி, தெஹியத்தகண்டிய நாகஸ்வெவ இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிப்பாக்கு புதிய வீட்டை நிர்மாணித்தனர். இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இரண்டு படையலகுகளின் கட்டளை அதிகாரிகளும் அந்த இரண்டு வீடுகளின் கட்டுமானங்களை நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.

திறப்பு விழாவில் திட்டத்தின் முன்னோடியான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு கலந்துகொண்டனர்.கந்தளாய் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களில் நடைபெற்ற வீடுகளை திறக்கும் நிகழ்வுகளில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.