Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:15:53 Hours

242 வது பிரிகேட் படையினரால் பொத்துவில் சிங்கள வித்தியாலயத்தில் நூலக கட்டிடம் புணரமைப்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேட் படையினரின் கோரிக்கையின் பேரில் பொத்துவில் சிங்கள வித்தியாலயத்தில் உள்ள நூலகக் கட்டிடத்தை புனரமைத்து மார்ச் 27 ம் திகதி நடைப்பெற்ற நிகழ்வென்றின் மூலம் பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

306 பி 2- வெலிவேரிய லயன்ஸ் கழகம் புனரமைப்பிற்கு தேவையான நிதிப் பங்களிப்பை வழங்கியதுடன், தெரிவுசெய்யப்பட்ட ஆறு மாணவர்களுக்கு ஆறு புலமைப்பரிசில்களையும் 1000 புத்தகங்களையும் பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியது. அதன்படி, ஆறு மாணவர்களுக்கு 2500/= மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட்டதுடன் மேலும் இரண்டு மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ரூ 5000/= பெறுமதியான இரண்டு புலமைப்பரிசில்கள் அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களின் ஆசிர்வாதத்துடன் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுராத சோலங்கராச்சி இந்த திட்டத்தை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுராத சோலங்கராச்சி கலந்துகொண்டதுடன் 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் சிவில் விவகார அதிகாரிகள், கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.