Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 21:04:33 Hours

24 வது காலாட் படைப்பிரிவினரால் அம்பாறை பாடசாலை மாணவிகளுக்கு ‘தலைமைத்துவ பயிற்சி

24 காலாட் படைப்பிரிவின் படையினரால் சமூகம் சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) அம்பாறை பண்டாரநாயக்க பெண்கள் பாடசாலை மற்றும் தமன மகா வித்தியாலயத்தின் 90 மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தை பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுத்தனர்.

தலைமைத்துவப் பண்பு, ஒழுக்கம், நெறிமுறைகள், முடிவெடுத்தல், முகாமை, பணிவு, தன்னம்பிக்கை, கண்ணியம், செயல்திறன், பொறுமை, சமூகமயமாக்கல், தொடர்பாடல், குழுப்பணி போன்றவற்றை மையமாகக் கொண்ட பயிற்சிப் திட்டம் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் எண்ணகருவிற்கமைய அம்பாறையில் உள்ள மற்றும் அடிப்படைத் தலைமைப் பண்புகளை நிறுவுதல் மற்றும் வழக்கமான வகுப்பறை பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக பொறுப்புள்ள வளர்ந்துவரும் பிரஜைகளை வளப்படுத்துவதை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இப் பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலைமைத்துவ நிகழ்ச்சிக்கு மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 90 ‘மருதை மரக்கன்றுகளை தலைமைத்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு விநியோகித்தார். ஏற்பாட்டின் போது, பயிலரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என இரு சாராருக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய விருந்து வழங்கப்பட்டது.

24 வது காலாட் படைப்பிரிவின் கீழ் கடமையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.