Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2022 20:10:26 Hours

24 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 600 ஏக்கர் நெற் செய்கைக்கு கால்வாயினை சீரமைப்பு

சேருநுவர, கல்லாறு, தெஹிவத்தை மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய சமூகங்கள் மற்றும் கிராம மக்களின் நீண்டகாலத் தேவைக்கு இணங்க 24 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் நீர் செல்லும் பிரதான நீர் கால்வாயின் அடைப்பை முழுமையாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

மாவிலாற்றில் இருந்து 20 கிலோமீற்றர் நீளமுள்ள கால்வாய் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் வழியாக விவசாய தேவைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தடைப்பட்டதால், சேருநுவர மற்றும் கல்லாறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், 22 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 222 வது பிரிகேட் படையினருக்கு இந்தப் பணியை மேற்கொண்டு விவசாய சமூகத்திற்கு இயன்ற வழிகளில் உதவுமாறு பணித்தார்.

அதன்படி, அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி 24 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் நீர்வழிப்பாதையை முழுவதுமாக சுத்தம் செய்து, கால்வாயினை சீரமைத்து, தடையின்றி நீர் போக்கினை சீரமைத்தனர்.

இதனால், நீர் வரத்து சீரமைக்கப்பட்டதன் மூலம் அப்பகுதிகளில் கைவிடப்பட்டிருந்த 600 ஏக்கர் பரப்பளவிலான நெல் வயலில் பயிரிட முடிந்தது என்று விவசாயிகள் தளபதிக்கு தெரிவித்தனர்.

222 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜூட் காரியகரவன மற்றும் 24 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்கேசீஜே ரத்னபிரிய ஆகியோர் 24 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முழு திட்டத்தையும் வழிநடத்தி நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.