Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2023 23:58:00 Hours

24 வது படைப்பிரிவில் 'ஊடக நெறிமுறைகள் தொடர்பில் செயலமர்வு

கிழக்கு படையினர் மற்றும் அம்பாறை சிவில் ஊடக சமூகம் ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் கருத்தரங்கு, 'இராணுவ மற்றும் சிவில் ஊடகங்களின் தாக்கம்: நேர்மறை மற்றும் எதிர்மறைகள்' என்ற தலைப்பில் 11-13 ஆம் திகதி வரை 24 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் 24 காலாட் படைப்பிரிவு படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி அவர்களின் வழிகாட்டுதளுக்கமைய கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

30 வருடங்களுக்கும் மேலான ஊடக அனுபவமுள்ள இலங்கை இராணுவ ஊடகத்தின் ஆலோசகர் திரு.சிசிர விஜேசிங்க அவர்களால் செயலமர்வு நடாத்தப்பட்டது. இதில் 25 க்கும் மேற்பட்ட கிழக்கை சார்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் மற்றும் 24 காலாட் படைப் பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விரிவுரைகள் மற்றும் தொழில்முறை உள்ளீடுகள் பெரும்பாலும் ஊடக நெறிமுறைகள், அறிக்கைகள், திரிபுகள், தவறான தகவல் மற்றும் தவறான தகவல் பிரச்சாரம் நம்பகத்தன்மை, பொறுப்புகள், சிவில்-இராணுவ உறவுகள், நாட்டின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் இன சார்பு, வகுப்புவாத உணர்வுகள், நியாயமான அறிக்கையிடல் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. சமூக நெறிமுறைகள், தவறான ஊடக அறிக்கைகளின் விளைவுகள், மிகைப்படுத்தல்கள், தனிநபர்களின் தனியுரிமை, முன்னுரிமை மற்றும் இளம் தலைமுறை தொடர்பாக நல்லிணக்க சைகைகளை ஊக்குவித்தல், தொழிநுட்ப மயமாக்கப்பட்ட சமூக ஊடகப் போக்குகள், பாதுகாப்பு செயல்பாட்டுத் தேவைகளைப் புரிந்துகொள்வது, இராணுவத்தின் கூட்டு தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் சிவில் பணியாளர்கள், வெறுக்கத்தக்க, வன்முறை மற்றும் குற்றவியல் அறிக்கைகளால் ஏற்படும் சேதங்கள், ஊடகங்களின் முதன்மை ஆணை மற்றும் பொறுப்பு, சிவில் சமூகத்தின் சிறந்த நலனுக்காக பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் பணிகளைப் பற்றிய பரந்த புரிதல் போன்றவையும் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

24 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கருத்தரங்கின் நோக்கத்தை வகுத்து, செயலமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அறிமுகக் கருத்துக்களை வெளியிட்டார். பட்டறைகளின் முடிவில், பங்குபற்றிய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் படைப்பிரிவின் தளபதி மற்றும் விரிவுரையாளர் ஆகியோரால் அனைத்து பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதேவேலை, காலாட் படைப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், ஊடகம் தொடர்பான அடிப்படைகள், அதன் தற்போதைய நடத்தை முறைகள், மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள், இராணுவம் மற்றும் பாதுகாப்பு மீதான தாக்கம், ஊடகத்தின் முக்கியத்துவம், அதன் நேர்மறை ஆகியவை தொடர்பாக அறிவூட்டப்பட்டனர், எதிர்மறை மற்றும் சமூக விரோத அம்சங்கள், இராணுவத்தின் பொறுப்புகள், இராணுவப் பேச்சாளரின் பங்கு, ஊடக பணிப்பகம், இராணுவ இணையத்தளம், முகப்புத்தகம், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் பணிகள் தொடர்பாகவும் திரு. சிசிர விஜேசிங்க அவர்கள் கருத்து தெரிவித்தார்.