Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2023 09:55:41 Hours

24 வது காலாட் படைப்பிரிவின் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

24 வது காலாட் படைப்பிரிவு 10வது ஆண்டு நிறைவை 27 நவம்பர் 2023 அன்று கொண்டாடியது. 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டு நிறைவையொட்டி நவம்பர் 22, 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தடயந்தலாவ ஸ்ரீ சம்போதி ருக்கராமய விகாரை, பரிவார தீகவாபி மகா விகாரை, மல்வத்தை விழாவடி விநாயகர் கோவில், மஜீத்புர ஜும்மா பள்ளிவாசல் மற்றும் சொரிகல்முனை திருசிலுவை தேவாலயம் ஆகியவற்றில் ‘சிரமதான’ பணிகளை மேற்கொண்டனர்.

அதேபோன்று, 24 வது காலாட் படைப்பிரிவினரால் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆண்டு நிறைவை முன்னிட்டு மருத்துவமனை நோயாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2023 நவம்பர் 24 அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 60 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றி இரத்த தானம் செய்தனர்.

அதே நாளில் (24), அம்பாறை ‘சரண’ முதியோர் இல்லத்தின் 25 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் நவம்பர் 26 அன்று தீகவாப்பிய ரஜமஹா விஹாரையில் 15 பிக்குகளுக்கு தானம் வழங்கப்பட்டது.

24 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் உள்ள விகாரையில் இராணுவத்தினருக்கு ஆசீர்வாதம் வேண்டி போதி பூஜை நடாத்தப்பட்டது.

அத்துடன் 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையக விளையாட்டு மைதானத்தில் படைப்பிரிவின் படையினர் கிரிக்கெட் போட்டியில் இணைந்துகொண்டனர் 24-25 நவம்பர் 2023 திகதிகளில் ஆரம்ப போட்டிகளும். இறுதிப் போட்டி 2023 நவம்பர் 25 யும் இடம்பெற்றது.

ஆண்டு நிறைவு நாளில் (நவம்பர் 27) இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பிஎஸ்சீ அவர்களுக்கு 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் மரக்கன்று நடுதல், குழு படம் எடுத்தல் மற்றும் படையினருக்கு உரையாற்றல் போன்றவையும் இடம்பெற்றன.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் 24 வது காலாட் படைப்பிரிவின் வரலாற்றில் பல தடயங்களை நினைவு கூர்ந்தார். அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்ப்பணிப்புகளையும் செயல்பாடுகளையும் பாராட்டினார்.

தொடர்ந்து படைப்பிரிவின் தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் மதிய உணவில் கலந்து கொண்டார். மாலை நிகழ்வுகளின் இறுதி அம்சமாக வளாகத்தில் படையினரை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 24 வது காலாட் படைப்பிரிவின் 241 மற்றும் 243 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளும் மாலை இசை நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிகாரிகள் சிப்பாய்கள், 15 ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதியில் சேவையாற்றும் முப்படையினரும் இணைந்து கொண்டனர்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை (01 டிசம்பர் 2023) 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு சேவைகளை பாராட்டி விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.