Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 23:38:46 Hours

234 வது பிரிகேட் படையினரால் கல்லோயா மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 வது காலாட் படைப்பிரிவின் 234 காலாட் பிரிகேட் படையினர் கல்லோயா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 77 மாணவர்களுக்கு வியாழன் (ஜன. 19) பாடசாலை உபகரணங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர். தலா ரூபா 3000 பெறுமதியான ஒவ்வொரு பொதியிலும் எழுதுபொருட்கள், புத்தகங்கள், துணைப் பொருட்கள், பேனாக்கள் மற்றும் பென்சில்கள் அடங்கியிருந்துடன் இவ் வழங்கல் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கம்பஹா பிரதேச ஆசிரியரான திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் அன்பான அனுசரணையின் மூலம் இந் நிகழ்வு நடைப்பெற்றது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சியின் வழிகாட்டல்களுக்கு அமைவாக 234 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க அவர்கள் தலைமையில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்கவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஜே.என்.எம்.யு.கே நவரத்ன பிரதம விருந்தினராகக் இந் நிகழ்வில் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர் என் சீ வை ராமநாயக்க அவர்களுடன் கலந்துகொண்டார். அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.