Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd March 2023 17:30:32 Hours

233 வது பிரிகேட் தலைமையகம் வாகரை பொதுமக்கள் மற்றும் படையினருக்கு புதிய வசதி வளாகம் திறப்பு

மட்டக்களப்பு வாகரை 233 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தினால் அப்பகுதியிலுள்ள படையினர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்ட உணவகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் சிகையலங்கார நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல வசதிகள் கொண்ட வளாகம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களினால் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 26) 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்கே மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே ஆகியோரின் அழைப்பின் பேரில் திறந்து வைக்கப்பட்டது.

233 வது காலாட் பிரிகேட் மற்றும் பிரதேசத்தில் உள்ள சிவில் சமூகத்தினரின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் படையினரின் பெறுமதியான கடின உழைப்பு மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவம் காரணமாக 233 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 233 வது பிரிகேட் படையினரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடா வெட்டப்பட்டு மங்கள விளக்கேற்றிய அன்றைய பிரதம விருந்தினர் ஏடிஎம் வங்கி வசதியுடன் நிறுவப்பட்டுள்ள வசதி வளாகத்தினை பார்வையிட்டதுடன் புதிய வளாகத்தில் சேவைகளை நிர்வகிக்கும் படையினருடன் உரையாடினார்.

23 வது காலாட் படைப்பிரிவுதளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே, 9 வது இலங்கை இராணுவ பீரங்கி படையணி, 6 வது கஜபா படையணி, 3 வது (தொ) விவசாயம் மற்றும் கால்நடை படையணி அகியவற்றின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.