Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2023 21:04:22 Hours

231 வது காலாட் பிரிகேட் படையினர் மட்டக்களப்பில் சிரமதானம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேட் படையினர், ஆக்ஷன் யூனிட்டி லங்கா அமைப்பின் அங்கத்தவர்கள், மற்றும் 200 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுடன் இணைந்து உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (ஜூன் 05) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டத்தை மட்டக்களப்பு நகரில் நடாத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தலைமையில், 231 வது காலாட் பிரிகேட் படையணியின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டி வீரசிங்க அவர்களுடன் அதிகாரிகள், சிப்பாய்கள், நகரங்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகளை மீள்சுழற்சி நோக்கங்களுக்காக சேகரித்து அவற்றை கொண்டு செல்வதற்கு உழவு இயந்திரங்களையும் வழங்கினர்.