Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2023 20:52:04 Hours

23 வது விஜயபாகு காலாட் படையினரால் மழையால் பாதிக்கப்பட்ட கிரவல் வீதி புனரமைப்பு

64 வது காலாட் படைப்பிரிவின் 642 வது காலாட் பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், ஒட்டுசுட்டான் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு முதல் தம்பனை வரையிலான மழையினால் சேதமடைந்த வீதியை முழுமையாக வாகனம் சீரமைத்தனர்.

மோசமான வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி கடுமையாக சேதமடைந்தது. இதனால் கிராம மக்கள் இராணுவத்தின் உதவியை நாடினர்.

64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்பீடபிள்யூஎன்டிபி வீரகோன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் (01 அதிகாரி மற்றும் 10 சிப்பாய்கள்) பொதுமக்களின் உதவியுடன் மண் பரவி வீதியை சீர் செய்தனர்.

அனைத்து குழிகள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் 2023 டிசம்பர் 24 ஆம் திகதி படையினர் வீதியை சீர் செய்ததுடன், சமூகம் சார்ந்த இப்பணியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.